மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை குறைந்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்தது. ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55 உயர்ந்தது.
இதே போல் அயல்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. வெள்ளியின் விலை குறைந்தது.
அயல்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 783.00/784.00 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 780.00/781.50).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.00/10.01 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 10.03/10.04)
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,490
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,430
பார் வெள்ளி கிலோ ரூ.16,970.