Publish Date: Wed, 10 Dec 2008 (12:28 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.36 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.23 ஆக இருந்தது இது திங்கட் கிழமை இறுதி நிலவரத்தை விட 36 பைசா குறைவு.
திங்கட் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.49.59 பைசா.
வர்த்தகம் நடக்கும் போது. 1 டாலரின் விலை ரூ.49.09 முதல் ரூ.49.23 என்ற அளவில் இருந்தது.
திங்கட் கிழமை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கியுள்ளன. இன்று காலை இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்வது காணப்பட்டது.
இதனால் தொடர்ந்து டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது.