மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், இறுதி வரை சிறிது வேறுபாட்டுடன் தொடர்ந்து உயர்ந்தன. மதியம் 2.30 மணிக்கு பிறகு குறைய துவங்கியது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 197.42 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,162.62 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 69.60 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,784.00 ஆக உயர்ந்தது.
இதே போல் சுமால் கேப் 19.65, பி.எஸ்.இ 500- 53.49 புள்ளிகள் அதிகரித்தன. ஆனால் மிட் கேப் 7.92 புள்ளி குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1384 பங்குகளின் விலை அதிகரித்தது. 1016 பங்குகளின் விலை குறைந்தது. 91 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.