Publish Date: Mon, 08 Dec 2008 (14:08 IST)
Updated Date: Mon, 08 Dec 2008 (14:07 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் பார் வெள்ளி, தங்கத்தின் விலை அதிகரித்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.200 அதிகரித்தது. இதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 உயர்ந்தது.
இதே போல் லண்டன் சந்தையிலும் விலை அதிகரித்தது.
லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 770.00/771.50 டாலராக அதிகரித்தது. (வெள்ளிக் கிழமை விலை 768.00/768.50).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 9.76/9.77 டாலராக உயர்ந்தது. (வெள்ளிக் கிழமை விலை 9.56/9.57)
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,350
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,290
பார் வெள்ளி கிலோ ரூ.16,725.