Publish Date: Mon, 08 Dec 2008 (11:35 IST)
Updated Date: Mon, 08 Dec 2008 (11:34 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.35 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.22 ஆக இருந்தது இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 35 பைசா குறைவு.
அமெரிக்கா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை காணப்படுகிறது. இதனால் இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் இருக்கும். அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வது குறையும். இதனால் டாலரின் தேவை அதிகரிக்காது என்பதால் வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்கின்றனர். டாலர் மதிப்பு குறைவதற்கு, இதுவே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.