Newsworld Finance Market 0812 08 1081208005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை உயர்வு

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ்
, திங்கள், 8 டிசம்பர் 2008 (10:53 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சென்செக்ஸ் 400, நிஃப்டி 35 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி, பொருளாதார நெருக்கடியால், இந்திய பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட மத்திய அரசு நேற்று மொத்தம் ரூ.30.700 கோடி சலுகைகளை அறிவித்துள்ளது.

இதே போல் ரிசர்வ் வங்கி சனிக்கிழமை வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடன், ரிபோ வட்டியையும், வங்கிகள் தங்களின் உபரி நிதியை ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்வதற்கு கொடுக்கும் ரிவர்ஸ் ரிபோ வட்டி விகிதத்தை தலா 1 விழுக்காடு குறைத்துள்ளது.

மத்திய அரசின் சலுகை, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், இந்திய பங்குச் சந்தையில் புது நம்பிக்கை பிறந்துள்ளது.

காலை 10.16 மணிளவில் நிஃப்டி 101.80 (3.75%) புள்ளிகள் அதிகரித்து குறீயீட்டு எண் 2,816.20 ஆக அதிகரித்தது.

இதே போல் சென்செக்ஸ் 331.99 (3.70%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,297.19 ஆக உயர்ந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன்ஸ் 259.18, எஸ் அண்ட் பி 500-30.85, நாஸ்டாக் 63.75 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளிக் கிழமை எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலையே இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-114.24 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.25 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 87.90 புள்ளிகள் அதிதரித்து, குறியீட்டு எண் 2,802.30 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 296.67 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,261.87 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 46.99, சுமால் கேப் 49.77, பி.எஸ்.இ. 500- 92.64 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று இந்தோனிஷியா, மலேசியா, இலங்கை தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தன.

ஜப்பானின் நிக்கி 365.18, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 77.77, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 15.49, ஹாங்காங்கினஹாங்செங் 1.040.57, சீனாவின் சாங்காய் காம்போசிட் 53.18 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.27 மணியளவில் 1126 பங்குகளின் விலை அதிகரித்தும், 324 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 35 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை ரூ. 04.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.184.02 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil