மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்து.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.83 என்ற அளவில் தொடங்கியது. இது நேற்றைய இறுதி விலையை விட 3 பைசா குறைவு.
நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 50.86 பைசா.
வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்தனர். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு உயர்நததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வர்த்தகம் நடக்கும் போது. 1 டாலரின் விலை ரூ.49.68 முதல் ரூ.49.95 என்ற அளவில் இருந்தது.
அத்துடன் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருப்பதால், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும். அத்துடன் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.