Newsworld Finance Market 0812 04 1081204005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ்
, வியாழன், 4 டிசம்பர் 2008 (10:46 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிக ஏற்ற, இறக்கத்துடன் ஆரம்பித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளன. இன்று அதிக மாற்றத்துடன் இருக்கும் என தெரிகிறது.

காலை 10.06 மணியளவில் நிஃப்டி 14.70, சென்செக்ஸ் 68.83 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்றும் சாதகமான நிலை இருந்தது. டோவ் ஜோன்ஸ் 172.60, எஸ் அண்ட் பி 500-21.93, நாஸ்டாக் 42.58 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளிலும் நேற்று சாதகமான நிலையே இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-47.10 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.34 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 9.75 புள்ளிகள் அதிதரித்து, குறியீட்டு எண் 2,666.20 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 38.82 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 8,786.26 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 23.27, சுமால் கேப் 27.04, பி.எஸ்.இ. 500- 19.12 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண் அதிகரித்தம், மற்றவைகளில் குறைந்தும் இருந்தது.

ஜப்பானின் நிக்கி 85.88, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 19.25 புள்ளிகள் குறைந்தது.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 18.23, ஹாங்காங்கினஹாங்செங் 91.16, சீனாவின் சாங்காய் காம்போசிட் 68.01, புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.37 மணியளவில் 684 பங்குகளின் விலை அதிகரித்தும், 290 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 24 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 452.11 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.366.24 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil