Publish Date: Wed, 03 Dec 2008 (17:05 IST)
Updated Date: Wed, 03 Dec 2008 (17:05 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தை, கடைசி நேரத்தில் சிறிது அதிகரித்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 8.19 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 8,747.43 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,656.45 ஆக குறைந்தது.
மிட் கேப் 25.26, சுமால் கேப் 12.69, பி.எஸ்.இ 500- 14.09 புள்ளிகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1180 பங்குகளின் விலை அதிகரித்தது. 930 பங்குகளின் விலை குறைந்தது. 78 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.