Publish Date: Tue, 02 Dec 2008 (16:41 IST)
Updated Date: Tue, 02 Dec 2008 (16:41 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தை, மதியம் சுமார் 2 மணிக்கு பிறகு அதிகரிக்க துவங்கியது. ஆனால் நேற்றைய இறுதி அளவை கூட எட்டவில்லை.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 100.63 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,739.24 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 25.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,657.80 ஆக குறைந்தது.
மிட் கேப் 41.14,, சுமால் கேப் 45.32, பி.எஸ்.இ 500- 32.91 புள்ளிகள் குறைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 2.14%, மின் உற்பத்தி 0.48% அதிகரித்தன.
ஆனால் வங்கி 0.66%, உலோக உற்பத்தி 1.08% , நுகர்வோர் பொருட்கள் 2.02%, பெட்ரோலிய நிறுவனங்கள் 2.45%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.98%, தொழில் நுட்பம் 0.64%, தகவல் தொழில் நுட்பம் 2.27% வாகன உற்பத்தி 3.04% குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜீனியர் தவிர, மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 801 பங்குகளின் விலை அதிகரித்தது. 1297 பங்குகளின் விலை குறைந்தது. 63 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
Webdunia
Publish Date: Tue, 02 Dec 2008 (16:41 IST)
Updated Date: Tue, 02 Dec 2008 (16:41 IST)