Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூபாய் மதிப்பு 10 பைசா சரிவு

ரூபாய் மதிப்பு 10 பைசா சரிவு
, திங்கள், 1 டிசம்பர் 2008 (13:03 IST)
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 50.18 பைசாவாக இருந்தது.

வெள்ளிக் கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.

பிறகு டாலரின் மதிப்பு 15 பைசா குறைந்தது. 1 டாலர் ரூ.49.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய இறுதி விலையை விட 15 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.95.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடைபெறுகையில் 1 டாலர் ரூ.50.02 முதல் ரூ.50.22 என்ற அளவில் விற்பனை ஆகி கொண்டுள்ளது.

இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலர் வாங்குவதே, இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil