பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.
இன்று காலை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 57.65 சென்செக்ஸ் 196.20 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
மத்திய அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொழில், வர்த்தக துறையினர் மத்தியில் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து உள்துறை அமைச்சராக இருந்து சிவராஜ் பாடீல் ராஜினமா செய்துள்ளார். நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்துடன் பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த மாற்றங்கள் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன.
இன்று காலை இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன. ஆனால் இதே நிலை மாலை வரை நீடிக்குமா என்பது கேள்விக்குறியே.
அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன்ஸ் 102.43, எஸ் அண்ட் பி 500-8.56, நாஸ்டாக் 3.47 புள்ளிகள் அதிகரித்தன.
ஐரோப்பிய நாடுகளிலும் வெள்ளிக் கிழமை ஆஸ்திரியா, இத்தாலி, நெதர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-61.91 புள்ளிகள் அதிகரித்தது.
காலை 10.36 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 62.45 (2.27%) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,817.55 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 182.78 (2.01%) புள்ளிகள் உயர்ந்து, குறியீட்டு எண் 9,275.50 ஆக அதிகரித்தது.
இதே போல் மிட் கேப் 32.63, சுமால் கேப் 32.84, பி.எஸ்.இ. 500- 64.51 புள்ளிகள் அதிகரித்தன.
ஆசிய நாடுகளில் இன்று ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது.
ஜப்பானின் நிக்கி 103.65, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 11.20 புள்ளிகள் குறைந்தது.
ஹாங்காங்கின் ஹாங்செங் 316.18, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 2.68, சீனாவின் சாங்காய் காம்போசிட் 8.87 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.24 மணியளவில் 739 பங்குகளின் விலை அதிகரித்தும், 304 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 38 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை ரூ. 168.54 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.621.24 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.