Newsworld Finance Market 0811 26 1081126052_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 331-நிஃப்டி 98 புள்ளி உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி
, புதன், 26 நவம்பர் 2008 (17:16 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த பங்குகள், சிறிது நேரத்தில் குறைய துவங்கின. பிறகு மீண்டும் அதிகரிப்பது, குறைவது என்ற நிலையில் இருந்தது.

மதியம் 2 மணிக்கு பிறகு, அதிகரிக்க துவங்கியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 331.19 (3.81%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,026.72 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 98.25 (3.70%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,752.25 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 4.79, (0.17%), சுமால் கேப் 18.53 (0.56%), பி.எஸ்.இ 500- 82.04 (2.56%) புள்ளிகள் அதிகரித்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 2.12%, வங்கி 5.96%, உலோக உற்பத்தி 3.66% , நுகர்வோர் பொருட்கள் 0.29%, மின் உற்பத்தி 1.91%, பெட்ரோலிய நிறுவனங்கள் 4.41%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.47%, தொழில் நுட்பம் 2.17%, தகவல் தொழில் நுட்பம் 1.48% வாகன உற்பத்தி 0.69% அதிகரித்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 939 பங்குகளின் விலை அதிகரித்தது. 1223 பங்குகளின் விலை குறைந்தது. 68 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 44 பங்குகளின் விலை அதிகரித்தது. 6 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 25 பங்குகளின் விலை அதிகரித்தது. 24 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 11 பங்குகளின் விலை அதிகரித்தது. 8 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் அதிகரித்தது.

மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 27 பங்குகளின் விலை உயர்ந்தது. 22 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil