Newsworld Finance Market 0811 26 1081126013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ் ஜப்பான் இலங்கை
, புதன், 26 நவம்பர் 2008 (10:58 IST)
மும்பை:பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. 10.30 மணியளவில் குறைய தொடங்கின.

இன்று நாள் முழுவதும் பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். மதியத்திற்கு பிறகு நிலையான தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.

இன்று காலை பங்குச் சந்தைகளிலவர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 26.80, சென்செக்ஸ் 110 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 36.08, எஸ் அண்ட் பி 500-5.58 புள்ளிகள் அதிகரித்தன.

ஆனால் நாஸ்டாக் 7.29 புள்ளி குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளிலும் நேற்று இத்தாலி, நெதர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-18.29 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.45 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.05 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,655.05 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1.81 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 8,693.72 ஆக இருந்தது.

இதே போல் மிட் கேப் 23.60, சுமால் கேப் 19.77, பி.எஸ்.இ. 500- 15.09 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாடுகளில் இன்று இலங்கை, ஜப்பான், மலேசியா தவிர மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது.

ஜப்பானின் நிக்கி 75.76 புள்ளிகள் குறைந்தது.

ஹாங்காங்கினஹாங்செங் 439.74, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 40.76, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 19.27, சீனாவின் சாங்காய் காம்போசிட் 12.41 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.45 மணியளவில் 477 பங்குகளின் விலை அதிகரித்தும், 868 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 47 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 161.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.155.09 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil