மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.670 அதிகரித்தது.
அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.40 அதிகரித்தது.
இதே போல் லண்டன் சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 811.00/812.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 801.00/802.25 டாலர்).
பார் வெள்ளி விலை 10.33/10.34 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 09.53/09.54 டாலர்).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,235
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,175
பார் வெள்ளி கிலோ ரூ.17,770.