மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலரின் மதிப்பு ரூ. 50.12-13 பைசாவாக இருந்தது. இது நேற்றைய இறுதி மதிப்பை விட, 8 பைசா அதிகம்.
நேற்று மாலை வர்த்தகம் முடியும் போது இருந்த 1 டாலரின் விலை ரூ.50.20-21 பைசாவாக இருவந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு 29 பைசா அதிகரித்தது. காலையில் 1 டாலர் ரூ.50.49-50 என்ற அளவில் துவங்கியது.
பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், நேற்றைய மாலை நிலவரத்தை விட குறையவில்லை.
அந்நிய முதலீடு வருவதாலும், ரிசர்வ் வங்கியின் தலையீட்டாலும் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.50.03 பைசா.
1 யூரோ மதிப்பு ரூ.62.71
100 யென் மதிப்பு ரூ.52.66
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.74.42.