Newsworld Finance Market 0811 19 1081119021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை உயர்வு!

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ் ரிசர்வ் வங்கி மன்மோகன் சிங்
பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. சென்செக்ஸ் 100 புள்ளி உயர்வுடன் வர்த்தகம் துவங்கியது.


இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.06 மணியளவில் நிஃப்டி 40.10 (1.49%), சென்செக்ஸ் 157.27 (1.76%), புள்ளிகள் அதிகரித்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 151.71, நாஸ்டாக் 1.22, எஸ் அண்ட் பி 500-8.37 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளில் ஆஸ்திரியா, பெல்ஜியத்தை தவிர, மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-76.39 புள்ளிகள் அதிகரித்தது.

மத்திய அரசு நேற்று உள்நாட்டு உலோக உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, இறக்குமதி செய்யப்படும் தேனிரும்பு, மற்றும் உலோக பொருட்களின் இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. இதே போன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிகிறது.

பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வர்த்தக அமைச்சர் கமல்நாத், திட்டகுழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையின் போது, பொருளாதார நெருக்கடியில் இருந்து அதிக பாதிப்பு இல்லாமல், காத்துக் கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டதாக தெரிகிறது இதை தொடர்ந்து அரசு பல நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை சிறிது நம்பிக்கையை தோன்று வித்துள்ளன.

பங்குச் சந்தையில் காலையில் முன்னேற்றம் இருந்தாலும், மாலை வரை இதே நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 51.55 (1.92%) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2734.70 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 183.36 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,120.56 ஆக அதிகரித்து.

இதே போல் மிட் கேப் 30.04, சுமால் கேப் 22.12, பி.எஸ்.இ. 500- 57.33 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில், சீனா, பிலிப்பைன்ஸ், இலங்கை தவிர மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.

ஹாங்காங்கினஹாங்செங் 28.72, ஜப்பானின் நிக்கி 180.62, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 26.16, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 17.99 புள்ளிகள் குறைந்து இருந்தன.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 43.06 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.24 மணியளவில் 943 பங்குகளின் விலை அதிகரித்தும், 550 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 49 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 441.59 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.458.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil