Newsworld Finance Market 0811 17 1081117060_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 94 –நிஃப்டி 11 புள்ளி சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி
, திங்கள், 17 நவம்பர் 2008 (16:34 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து குறியீட்டு எண்கள் ஒரே சீராக குறைந்தன. மதியம் 2 மணிக்கு பிறகு, சிறிது சிறிதாக அதிகரிக்க துவங்கின.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 94.41, (1.01%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,291.01 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10.80 (0.38%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2799.55 ஆக குறைந்தது.

மிட் கேப் 82.72 (2.57%), சுமால் கேப் 103.66 (2.75%), பி.எஸ்.இ 500- 58.45 (1.67%) புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 5.17%, வங்கி 3.87%, உலோக உற்பத்தி 3.08% , நுகர்வோர் பொருட்கள் 1.19%, மின் உற்பத்தி 1.27%, பெட்ரோலிய நிறுவனங்கள் 0.42%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.76%, வாகன உற்பத்தி 1.39% குறைந்தது.

ஆனால் தொழில் நுட்பம் 0.49%, தகவல் தொழில் நுட்பம் 0.02% அதிகரித்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 679 பங்குகளின் விலை அதிகரித்தது. 1800 பங்குகளின் விலை குறைந்தது. 60 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 17 பங்குகளின் விலை அதிகரித்தது. 33 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது. 42 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், எல்லா பங்குகளின் விலையும் குறைந்தது.

மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 9 பங்குகளின் விலை உயர்ந்தது. 40 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil