Newsworld Finance Market 0811 17 1081117022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு 13 பைசா சரிவு!

Advertiesment
டாலர் அந்நியச் செலவாணி சந்தை
, திங்கள், 17 நவம்பர் 2008 (12:18 IST)
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.02 பைசா என்ற அளவில் இருந்தது.

ஆனால் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ. 48.88 முதல் ரூ.48.90 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 13 பைசா அதிகம்.

ரிசர்வ் வங்கி அந்நிய நாடுகளில் இருந்து வரும் வைப்பு நிதி அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அந்நிய வங்கிகளும், மற்றவர்களும் டாலரை விற்பனை செய்தனர். டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததற்கு இதுவே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil