Newsworld Finance Market 0811 13 1081113061_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை சரிவு!

Advertiesment
தங்கம் பார் வெள்ளி
, வியாழன், 13 நவம்பர் 2008 (15:21 IST)
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளி, தங்கத்தின் விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.175 குறைந்தது.

அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.95 குறைந்தது. அந்நிய நாட்டு சந்தைகளில் விலை குறைந்ததாலும், ஆபரண உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால், இரண்டின் விலையும் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

லண்டன் சந்தையிலும் விலைகள் குறைந்தன.
இங்குள்ள வர்த்தகர்கள் கச்சா எண்ணெய் விலை குறைவு, பங்குச் சந்தையின் சரிவால் தங்கம், வெள்ளியின் விலை குறைந்து என்று கூறினார்கள்.

இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 715.00/716.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 738.00/739.25).

இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 09.28/09.29 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 09.89/09.90).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,865
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,800
பார் வெள்ளி கிலோ ரூ.17,205.

Share this Story:

Follow Webdunia tamil