Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 303 -நிஃப்டி 90 புள்ளி சரிவு!

சென்செக்ஸ் 303 -நிஃப்டி 90 புள்ளி சரிவு!
, புதன், 12 நவம்பர் 2008 (17:22 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறைந்த குறியீட்டு எண்கள், கடைசி வரை முன்னேறவே இல்லை.அத்துடன் அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நண்பகல் 1 மணிக்கு பிறகு சரிய துவங்கியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 303.36, (3.08%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,536.33 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 90.20 (3.07%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2848.45 ஆக குறைந்தது.

மிட் கேப் 75.43 (2.25%), சுமால் கேப் 74.63 (1.92%), பி.எஸ்.இ 500- 101.27 (2.77%) புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 7.34%, வங்கி 4.38%, உலோக உற்பத்தி 3.67% , நுகர்வோர் பொருட்கள் 3.63%, மின் உற்பத்தி 3.03%, பெட்ரோலிய நிறுவனங்கள் 2.96%, தொழில் நுட்பம் 1.42%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.33%, தகவல் தொழில் நுட்பம் 0.08%, வாகன உற்பத்தி 2.59% குறைந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 818 பங்குகளின் விலை அதிகரித்தது. 1701 பங்குகளின் விலை குறைந்தது. 76 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 7 பங்குகளின் விலை அதிகரித்தது. 42 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 10 பங்குகளின் விலை அதிகரித்தது. 38 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 2 பங்குகளின் விலை அதிகரித்தது. 10 பங்குகளின் விலை குறைந்தது.

மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 10 பங்குகளின் விலை உயர்ந்தது. 38 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.


Share this Story:

Follow Webdunia tamil