Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!
, புதன், 12 நவம்பர் 2008 (12:24 IST)
பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.07 மணியளவில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. நிஃப்டி 65.20 (2.22%) சென்செக்ஸ் 205,35 (2.09%) புள்ளிகள் குறைந்தன.

கச்சா எண்ணெய் விலை நியுயார்க், லண்டன் சந்தைகளில் குறைந்தது. பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, தொழில் துறை நெருக்கடியால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

நியுயார்க் சந்தையில் 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 59 டாலராக குறைந்தது. 2007 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் தடவையாக பீப்பாய் 60 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. இதே போல் லண்டன் சந்தையிலும் விலை குறைந்தது. இங்கு 1 பீப்பாய் 55.62 டாலராக குறைந்தது.

இதன் விலை சரிவை தடுத்து நிறுத்த, ஒபெக் நாடுகள் நவம்பர் மாதம் முதல் தினசரி 15 லட்சம் பீப்பாய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன. இவை உற்பத்தியை குறைத்தாலும், தேவை தொடர்ந்து குறைவதால் விலை சரிந்து வருகிறது.

ஒபெக் நாடுகளின் கூட்டம் அடுத்த மாதம் அல்ஜிரியாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேலும் 1 மில்லியன் பீப்பாய் உற்பத்தி குறைப்பு முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்றும் குறியீட்டு எண்கள் சரிந்தன. டோவ் ஜோன்ஸ் 176.58, நாஸ்டாக் 35.84, எஸ் அண்ட் பி 500-20.26 புள்ளிகள் குறைந்தன.

இதே போல் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் நேற்று குறீயீட்டு எண்கள் குறைந்தன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த இரண்டு தினங்களில் முன்னேற்றம் இருந்தது. நேற்று மீண்டும் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-157.23 புள்ளிகள் குறைந்தது.

இந்தியாவின் செப்டம்பர் மாத தொழில் துறை உற்பத்தி பற்றிய புள்ளி விபரம் மதியம் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 1.3 விழுக்காடாக குறைந்தது. செப்டம்பர் மாதம் நிலைமை சிறிது முன்னேறி இருக்கும் என்று கருத்ப்படுகிறது. செப்டம்பர் மாத தொழில் துறை உற்பத்தி 5 முதல் 7 விழுக்காடு என்ற அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த புள்ளி விபரம் வந்த பிறகு பங்குச் சந்தையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 30.95 (1.05%) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2907.70 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 101.44 (1.03% ) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,738.25 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 22.51, சுமால் கேப் 28.28, பி.எஸ்.இ. 500- 29.39 புள்ளிகள் குறைந்தன.

இன்று காலை ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தன. கடந்த இருபது மாதங்களில் இல்லாத அளவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

ஹாங்காங்கினஹாங்செங் 201.35, ஜப்பானின் நிக்கி 120.02, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 19.05, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 9.45, சீனாவின் சாங்காய் காம்போசிட் 15.05 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.33 மணியளவில் 601 பங்குகளின் விலை அதிகரித்தும், 1005 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 42 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 370.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.229.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil