மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறைந்த குறியீட்டு எண்கள், கடைசி வரை எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாக குறைந்தன.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 696.47 (6.61%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,839.69 ஆக சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 209.60 (6.66%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2938.65 ஆக குறைந்தது.
மிட் கேப் 118.39 (3.41%), சுமால் கேப் 100.02 (2.51%), பி.எஸ்.இ 500- 220.35 (5.68%) புள்ளிகள் குறைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் உலோக உற்பத்தி 8.42% , மின் உற்பத்தி 7.70%, நுகர்வோர் பொருட்கள் 7.24%, பெட்ரோலிய நிறுவனங்கள் 7.18%, தொழில் நுட்பம் 6.47%, பொதுத்துறை நிறுவனங்கள் 5.24%, தகவல் தொழில் நுட்பம் 6.47%, ரியல் எஸ்டேட் 10.25%, வங்கி 6.17%, வாகன உற்பத்தி 4.30% குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 759 பங்குகளின் விலை அதிகரித்தது. 1766 பங்குகளின் விலை குறைந்தது. 77 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 47 பங்குகளின் விலை குறைந்தது.
ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது. 44 பங்குகளின் விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 1 பங்குகளின் விலை அதிகரித்தது. 18 பங்குகளின் விலை குறைந்தது.
வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 1 பங்குகளின் விலை அதிகரித்தது. 11 பங்குகளின் விலை குறைந்தது.
மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 7 பங்குகளின் விலை உயர்ந்தது. 42 பங்குகளின் விலை குறைந்தது.