மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்தது. தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 751.00/752.50 டாலராக உயர்ந்தது. (வெள்ளிக் கிழமை விலை 745.00/746.25 ).
இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.28/10.29 டாலராக அதிகரித்தது. (வெள்ளிக் கிழமை விலை 10.21/10.22).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,780
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,715
பார் வெள்ளி கிலோ ரூ.17,485.