Publish Date: Fri, 07 Nov 2008 (13:11 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (13:09 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த உடன், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலரை வாங்கினார்கள்.
இதனால் வர்த்தகம் துவங்கியவுடன் 1 டாலர் ரூ.47.94 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட, 20 பைசா குறைவு. (நேற்றைய இறுதி விலை ரூ.47.74).
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.47.66 முதல் ரூ.47.94 என்ற அளவில் இருந்தது.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, இந்தியாவின் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க துவங்கியிருப்பது போன்ற காரணங்களினால், பங்குச் சந்தைகளில் குறீயீட்டு எண்கள் குறைந்தன.
இந்த வருடம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்து வருகின்றன. இது வரை 12.6 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன்.
இவை சென்ற வருடம் மட்டும் 17.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கிகள் டாலரை விற்பனை செய்தால் அதிக பாதிப்பு இருக்காது என வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.47.76 பைசா.
1 யூரோ மதிப்பு ரூ.60.81
100 யென் மதிப்பு ரூ.49.00
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ. 74.87.