மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த உடன், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலரை வாங்கினார்கள்.
இதனால் வர்த்தகம் துவங்கியவுடன் 1 டாலர் ரூ.47.94 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட, 20 பைசா குறைவு. (நேற்றைய இறுதி விலை ரூ.47.74).
உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, இந்தியாவின் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க துவங்கியிருப்பது போன்ற காரணங்களினால், பங்குச் சந்தைகளில் குறீயீட்டு எண்கள் குறைந்தன.
ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கிகள் டாலரை விற்பனை செய்தால் அதிக பாதிப்பு இருக்காது.