அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 40 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை நேற்று நிறைவடையும் போது ரூ.47.46 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் ரூ.47.86 ஆக சரிந்தது.
நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.47.58ல் இருந்து ரூ.47.96 ஆக காணப்பட்டது.
இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக அயல்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் நிதியை திரும்பப் பெறத் துவங்கியிருப்பதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரு சதவீதம் வரை சரிந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.