Publish Date: Wed, 05 Nov 2008 (14:26 IST)
Updated Date: Wed, 05 Nov 2008 (14:23 IST)
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.110 அதிகரித்தது.
அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125அதிகரித்தது.
அயல்நாட்டு சந்தைகளில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்ததுடன், இங்கும் ஆபரணத் தயாரிப்பாளர்கள் அதிக அளவு தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச சந்தைகளிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 752.00/753.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 733.00/733.25)
பார் வெள்ளியின் விலை 10.20/10.21 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 9.80/9.82).
இன்றைய விலை
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,810
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,750
பார் வெள்ளி கிலோ ரூ.17,465.