மும்பை:பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார, நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பங்குச் சந்தை, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து முன்னேற்றம் காணப்பட்டது.
இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் உயர்ந்தன.
இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.05 மணியளவில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. நிஃப்டி 63.10, சென்செக்ஸ் 175.61 புள்ளிகள் அதிகரித்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 305.45, எஸ் அண்ட் பி 500-39.45, நாஸ்டாக் 53.79 புள்ளிகள் அதிகரித்தது.
ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-106.22 புள்ளிகள் உயர்ந்தது.
காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 41.10 (1.31% ) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3183.20 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 157.46 (1.48% ) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10.788.58 ஆக அதிகரித்தது.
இதே போல் மிட் கேப் 78.03, சுமால் கேப் 88.41, பி.எஸ்.இ. 500- 62.07 புள்ளிகள் அதிகரித்தன.
இன்று காலை ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காணப்பட்டது..
ஹாங்காங்கின் ஹாங்செங் 812.53, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 43.30, ஜப்பானின் நிக்கி 249.12, சீனாவின் சாங்காய் காம்போசிட் 185.22, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 70.39 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.18 மணியளவில் 1225 பங்குகளின் விலை அதிகரித்தும், 383 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 35 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 15.61 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இதே போல், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் 174.20 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இன்று பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கமாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நிலைமை மாறலாம்.