மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது,சரிந்த குறியீட்டு எண்கள், நண்பகலுக்கு பிறகு அதிகரிக்க துவங்கின.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 293.44 (2.84%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,631.12 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 98.25 (3.23%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3142.10 ஆக அதிகரித்தது.
மிட் கேப் 90.68 (2.70%), சுமால் கேப் 108.11 (2.75%), பி.எஸ்.இ 500- 121.61 (3.24%) புள்ளிகள் அதிகரித்தது.
இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 12.14%, வங்கி 6.56%, மின் உற்பத்தி 5.66%, நுகர்வோர் பொருட்கள் 4.61%, பெட்ரோலிய நிறுவனங்கள் 3.09%, வாகன உற்பத்தி 1.61%, உலோக உற்பத்தி 4.13% ,பொதுத்துறை நிறுவனங்கள் 4.82% அதிகரித்தது.
ஆனால் தொழில் நுட்பம் 2.66%, தகவல் தொழில் நுட்பம் 0.82% குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1809 பங்குகளின் விலை அதிகரித்தது. 777 பங்குகளின் விலை குறைந்தது. 69 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 39 பங்குகளின் விலை அதிகரித்தது. 11 பங்குகளின் விலை குறைந்தது.
ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 45 பங்குகளின் விலை அதிகரித்தது. 4 பங்குகளின் விலை குறைந்தது
சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 8 பங்குகளின் விலை அதிகரித்தது. 11 பங்குகளின் விலை குறைந்தது.
வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் அதிகரித்தது.
மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 39 பங்குகளின் விலை உயர்ந்தது. 10 பங்குகளின் விலை குறைந்தது.