Publish Date: Tue, 04 Nov 2008 (12:41 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (12:40 IST)
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தது.
வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.48.72 பைசா என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய விலையை விட, 6 பைசா குறைவு.
கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு, நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. 1 டாலர் ரூ.48.66 ஆக இருந்தது.
வர்த்ககம் நடக்கும் போது, டாலரின் மதிப்பு மேலும் அதிகரித்து. 1 டாலர் ரூ. 48.73 முதல் ரூ.48.94 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து குறியீட்டு எண்கள் சரிந்தன. அந்நியச் முதலீட்டு நிறுவனங்கள் கடந்த நான்கு நாட்களாக வாங்கிய சில பங்குளை விற்பனை செய்தன. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்து. இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறையாமல் இருக்க, ரிசர்வ் வங்கி தலையீடு இருக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.