Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் சரிவு!

பங்குச் சந்தைகளில் சரிவு!
, செவ்வாய், 4 நவம்பர் 2008 (10:41 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.05 மணியளவில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. நிஃப்டி 54.95, சென்செக்ஸ் 177.46 புள்ளிகள் குறைந்தன.


அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 5.18, எஸ் அண்ட் பி 500-2.45 புள்ளிகள் குறைந்தன. நாஸ்டாக் 5.38 புள்ளிகள் உயர்ந்தது.

ஐரோப்பிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-65.94 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 45.60, புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2998.25 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 186.02 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 10.151.66 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 32.29, சுமால் கேப் 14.79, பி.எஸ்.இ. 500- 52.90 புள்ளிகள் குறைந்தன.

இன்று காலை ஹாங்காங்கினஹாங்செங் 30.97, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 10.06, ஜப்பானின் நிக்கி 413.33 புள்ளிகள் அதிகரித்தது.

அதே நேரத்தில் சீனாவின் சாங்காய் காம்போசிட் 28.51, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 26.96 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.36 மணியளவில் 810 பங்குகளின் விலை அதிகரித்தும், 969 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 47 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 363.55 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 97.03 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இன்று பங்குச் சந்தைகளில் காலையில் பாதகமாக இருந்தாலும், நண்பகலுக்கு பிறகு பங்குச் சந்தை முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil