மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து, பாதிக்காமல் இருந்தது. குறியீட்டு எண்களில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், இறுதியில் எல்லா பிரிவு பங்கு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 743.55 (8.22%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,788.05 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 188.55 (6.99%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2885.60 ஆக அதிகரித்தது.
மிட் கேப் 105.54 (3.41%), சுமால் கேப் 80.50 (02.46%), பி.எஸ்.இ 500- 219.45 (6.55%) புள்ளிகள் அதிகரித்தது.
இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 2.30%, வங்கி 7.21%, தொழில் நுட்பம் 5.00%, மின் உற்பத்தி 5.54%, நுகர்வோர் பொருட்கள் 5.00%, தகவல் தொழில் நுட்பம் 5.77%, பெட்ரோலிய நிறுவனங்கள் 9.11%, வாகன உற்பத்தி 6.39%, உலோக உற்பத்தி 10.20% , பொதுத்துறை நிறுவனங்கள் 2.74% அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1577 பங்குகளின் விலை அதிகரித்தது. 916 பங்குகளின் விலை குறைந்தது. 82 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 42 பங்குகளின் விலை அதிகரித்தது. 8 பங்குகளின் விலை குறைந்தது.
ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 37 பங்குகளின் விலை அதிகரித்தது. 12 பங்குகளின் விலை குறைந்தது
சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 17 பங்குகளின் விலை அதிகரித்தது. 2 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 9 பங்குகளின் விலை குறைந்தது. 3 பங்குகளின் விலை அதிகரித்தது.
மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 39 பங்குகளின் விலை உயர்ந்தது. 10 பங்குகளின் விலை குறைந்தது.