Newsworld Finance Market 0810 31 1081031030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு 17 பைசா சரிவு!

Advertiesment
டாலர் ரிசர்வ் வங்கி யூரோ யென் பவுன்ட் ஸ்டெர்லிங்
, வெள்ளி, 31 அக்டோபர் 2008 (13:40 IST)
மும்பை: இன்று காலை அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா அதிகரித்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.50 பைசா என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

இது நேற்றைய முந்தைய விலையை விட, 17 பைசா குறைவு.

முந்தைய விலை 1 டாலர் ரூ.49.67.

வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ.49.35 முதல் ரூ.49.55 என்ற அளவில் இருந்தது.

இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அத்துடன் பொதுத்துறை வங்கிகளும் டாலரை விற்பனை செய்ததால், ரூபாய் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.49.25 பைசா.
1 யூரோ மதிப்பு ரூ.62.84
100 யென் மதிப்பு ரூ.50.42
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.80.36.


Share this Story:

Follow Webdunia tamil