மும்பை: இன்று காலை அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.59 பைசா என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
இது நேற்றைய முந்தைய விலையை விட, 29 பைசா குறைவு.
வர்த்ககம் நடக்கும் போது, 1 டாலர் ரூ.49.60 முதல் ரூ.49.85 வரை விற்பனை செய்யப்பட்டது.
பங்குச் சந்தையில் காலையில் அதிகரித்து குறியீட்டு எண்கள் மீண்டும் சரிய துவங்கின. அந்நியச் முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நிலைமை இதற்கு நேற்மாறாக இருந்தன. அந்நிய முதலீடு வெளியேறுவதுடன், பெட்ரோலிய நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும் டாலரை வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.
நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்நிய செலவாணி சந்தைக்கு விடுமுறை.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.49.77 பைசா.
1 யூரோ மதிப்பு ரூ.63.36
100 யென் மதிப்பு ரூ.51.33
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.79.78