Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தைகளில் மாற்றம்!

பங்குச் சந்தைகளில் மாற்றம்!
, புதன், 29 அக்டோபர் 2008 (11:02 IST)
மும்பை:பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று வர்த்தகர்களின் சமாவாத் 2065 புது வருட கணக்கு துவக்குவதை முன்னிட்டு மாலை 1 மணிநேரம் வர்த்தகம் நடந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்த பங்குச் சந்தைகளில் நேற்று எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

நேற்றைய முகாரத் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 498.52 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று காலை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஆரம்பிக்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. நிஃப்டி 44, சென்செக்ஸ் 140 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று பங்குச் சந்தைகளில் காலையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தாலும், இந்த நிலை இறுதி வரை நீடிக்கும் என்று தெரியவில்லை. இன்று அதிக அளவு மாற்றத்துடன் இருக்கும்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று முன்னேற்றம் காணப்பட்டது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 889.35, எஸ் அண்ட் பி 500-91.59, நாஸ்டாக் 143.57 புள்ளிகள் உயர்ந்தது.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று இத்தாலி, ஸ்பெயின் தவிர மற்ற பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-73.79 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.35 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10.40 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2695.00 ஆக இருந்த்து.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 125.66 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,133.74 ஆக இருந்தது.

இதே போல் மிட் கேப் 13.93, சுமால் கேப் 43.64, பி.எஸ்.இ. 500- 33.08 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இரு வேறு நிலைகளும் இருந்தன. இந்த வார இறுதியில் ஜப்பான் ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று தெரிகிறது.

இன்று காலை ஹாங்காங்கினஹாங்செங் 171.47, ஜப்பானின் நிக்கி 229.22 புள்ளிகள் அதிகரித்தன.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 23.91, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 23.01, சீனாவின் சாங்காய் காம்போசிட் 20.97 சரிந்தன குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.58 மணியளவில் 862 பங்குகளின் விலை அதிகரித்தும், 914 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 47 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 69.18 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 24.78 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.



Share this Story:

Follow Webdunia tamil