மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று 8 ஆயிரத்துக்கும் கீழே சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 1,071 புள்ளிகள் சரிவுடன் 8,701ல் நிலை கொண்டது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. மதியம் 1.26 மணியளவில் சென்செக்ஸ் 935 புள்ளிகள் சரிந்து 7,766 ஆக காணப்பட்டது.
கடந்த ஜனவரியில் சென்செக்ஸ் 21,207 ஆக உயர்ந்திருந்தது. அதிலிருந்து தற்போது 63 விழுக்காடு சரிந்துள்ளது.
டிஎல்எப் பங்குகள் 21.5 விழுக்காடும், ஜெய்ப்பிரகாஷ் அசோஸியேட்ஸ் 20 விழுக்காடும், விப்ரோ 18.5 விழுக்காடும், ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனப் பங்குகள் 17.5 விழுக்காடும் சரிந்து காணப்பட்டன.
ஓஎன்ஜிசி, கிராஸிம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ் ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து காணப்பட்டன.
அதே நேரத்தில் தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 307 புள்ளிகள் சரிந்து 2,277 ஆக இருந்தது.