Newsworld Finance Market 0810 24 1081024066_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிஃப்டி 359 -சென்செக்ஸ் 1071 புள்ளி சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி
, வெள்ளி, 24 அக்டோபர் 2008 (16:57 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து, இறுதி வரை எல்லா பிரிவு பங்கு குறியீட்டு எண்களும் கடுமையாக சரிந்தன.

சென்செக்ஸ் 9 ஆயிரத்திற்கும் குறைந்தது.

இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1070 புள்ளிகள் சரிந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 1070.63 (10.96%) புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 8,701.07 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 359.15 (12.20%) புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 2584.00 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 283.04 (8.38%), சுமால் கேப் 303.87 (7.66%), பி.எஸ்.இ 500- 382.31 (10.50%) புள்ளிகள் குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 24.39%, வங்கி 12.62%, தகவல் தொழில் நுட்பம் 5.16%, தொழில் நுட்பம் 8.51%, மின் உற்பத்தி 11.43%, பெட்ரோலிய நிறுவனங்கள் 14.97%, வாகன உற்பத்தி 10.43%, உலோக உற்பத்தி 12.07% ,பொதுத்துறை நிறுவனங்கள் 10.29% நுகர்வோர் பொருட்கள் 8.75% சரிந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 260 பங்குகளின் விலை அதிகரித்தது. 2322 பங்குகளின் விலை குறைந்தது. 46 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 50 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 49 பங்குகளின் விலையும் குறைந்தது

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 19 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 48 பங்குகளின் விலை குறைந்தது. ஒரே ஒரு பங்கின் விலை மட்டும் உயர்ந்தது.


Share this Story:

Follow Webdunia tamil