Publish Date: Fri, 24 Oct 2008 (13:52 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (13:51 IST)
மும்பை: மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் கடந்த மூன்று நாட்களாக விலை குறைந்து வந்தது.
இன்று நிலைமை மாறி இதன் விலைகள் சிறிது அதிகரித்தன.
இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ. 70 அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.10 அதிகரித்தது.
ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 726/727 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 719/720 டாலர்).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 9.35/9.36 டாலராக அதிகரித்து (நேற்றைய விலை 9.32/9.33 டாலர்) என்று சிங்கப்பூரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,715
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,650
பார் வெள்ளி கிலோ: ரூ.17,605.