மும்பை: டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் முதன் முறையாக ரூ.50 ஐ தாண்டியது.
பங்குச் சந்தையில் ஏற்பட்டு வரும் தொடர் வீழ்ச்சி, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து, முதலீடுகளை கொண்டு செல்கின்றன. அத்துடன் பெட்ரோலிய நிறுவனங்கள் உட்பட இறக்குமதியாளர்கள் தொடர்ந்து டாலரை வாங்குகின்றனர்.
இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.
இன்று காலை அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 1 டாலர் ரூ.50.03 பைசா என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
இது நேற்றைய இறுதி விலையை விட, 22 பைசா சரிவு.
மத்திய அரசு நேற்று அந்நிய முதலீடு வெளியேறுவது குறைந்தால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது குறையும் என்று கூறியிருந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு, பங்குச் சந்தை உட்பட, பல்வேறு காரணங்களால் முடிவு செய்யப்படுகிறது. இவை மாறும் போது ரூபாயின் மதிப்பு சரிவுது குறையும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகார பிரிவு செயலாளர் அசோக் சாவ்லா கூறியிருந்தார்.