Newsworld Finance Market 0810 23 1081023055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிஃப்டி 122 -சென்செக்ஸ் 398 புள்ளி சரிவு!

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ் மிட்கேப்
, வியாழன், 23 அக்டோபர் 2008 (17:03 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து, இறுதி வரை எல்லா பிரிவு பங்கு குறியீட்டு எண்களும் குறைந்தன. நண்பகல் 1 மணி அளவில் குறியீட்டு எண்கள் உயர ஆரம்பித்தன. ஆனால் 1 மணி நேரத்திலேயே மீண்டும் குறைய ஆரம்பித்தன.

நிஃப்டி 3 ஆயிரம் புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் பத்தாயிரத்திரம் புள்ளிகளுக்கும் குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 398.20 (3.92%) புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 9,771.70 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 122 (3.98%) புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 2943.15 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 111.67 (3.20%), சுமால் கேப் 145.99 (3.55%), பி.எஸ்.இ 500- 150.20 (3.96 %) புள்ளிகள் குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 5.26%, வங்கி 3.33%, தகவல் தொழில் நுட்பம் 1.81%, தொழில் நுட்பம் 3.38%, மின் உற்பத்தி 2.16%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.30%, வாகன உற்பத்தி 7.21%, உலோக உற்பத்தி 11.08% ,பொதுத்துறை நிறுவனங்கள் 2.30% குறைந்தன.

நுகர்வோர் பொருட்கள் 0.25% அதிகரித்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 622 பங்குகளின் விலை அதிகரித்தது. 1908 பங்குகளின் விலை குறைந்தது. 66 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 10 பங்குகளின் விலை அதிகரித்தது 40 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது. 43 பங்குகளின் விலை குறைந்தது

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 4 பங்கின் விலை அதிகரித்தது. 15 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 3 பங்கின் விலை அதிகரித்தது. 9 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 45 பங்குகளின் விலை குறைந்தது.


Share this Story:

Follow Webdunia tamil