Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

Advertiesment
ரூபாய் மதிப்பு கடும் சரிவு!
, வியாழன், 23 அக்டோபர் 2008 (12:38 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று இதுவரை இல்லாத அளவிற்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தது.

காலையில் ரூபாயின் மதிப்பு 38 பைசா குறைந்தது.

இன்று வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், 1 டாலரின் மதிப்பு ரூ.49.68 ஆக இருந்தது.

நேற்றைய இறுதி நிலவரத்தை விட, டாலரின் மதிப்பு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு 37 பைசா குறைந்தது.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.31.

இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் சரிவு, அத்துடன் டாலருக்கு நிகரான யூரோ போன்ற நாணயங்களின் மதிப்பு அதிகரிப்பு, ஆகிய காரணங்களினால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.




Share this Story:

Follow Webdunia tamil