மும்பை: மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.295 குறைந்தது.
ஆனால் பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ. 10 மட்டுமே குறைந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 761/762 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 788/789 டாலர்). ஆனால் வெள்ளியின் விலை சிறிது அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 9.93/9.94 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 9.80/9.81 டாலர்).
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,290
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,230
பார் வெள்ளி கிலோ: ரூ.18,040.