மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே உயர்வுடன் காணப்பட்டது.
பிற்பகல் 1 மணியளவில் பிஎஸ்இ குறியீடு 308 புள்ளிகள் உயர்ந்து 10,558 ஆக இருந்தது.
இதேபோல தேசியப் பங்குச் சந்தை - நிஃப்டி குறியீடு 74 புள்ளிகள் உயர்வுடன் 3,196.45 ஆக இருந்தது.
பிஎஸ்இ குறியீடு கடந்த வாரத்தில் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்ற நிலையில், நேற்றும் இன்றும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
பங்குச் சந்தையில் ஏற்பட்டு வரும் சரிவு மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால நிதிக்கான வட்டி விகிதத்தை (ரீப்போ ரேட்) ஒரு விழுக்காடு உயர்த்தி நேற்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.