Newsworld Finance Market 0810 17 1081017058_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிஃப்டி 195-சென்செக்ஸ் 606 புள்ளி சரிவு!

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ் மின் உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்கள்
, வெள்ளி, 17 அக்டோபர் 2008 (17:00 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 10 ஆயிரத்திற்கும் குறைந்தது.

மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து மதியம் 3 மணி வரை ஏற்ற இறக்கமாக இருந்தது.

பிறகு இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் படிப்படியாக குறைய துவங்கின.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 606.14 (5.73%) புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 9,975.35 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 194.95 (5.96%) புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 3074.35 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 112.29 (3.07%), சுமால் கேப் 118.50 (2.76%), பி.எஸ்.இ 500- 193.97 (4.89%) புள்ளிகள் குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 10.25%, வங்கி 5.46%, நுகர்வோர் பொருட்கள் 5.52%, தகவல் தொழில் நுட்பம் 4.94%, தொழில் நுட்பம் 5.91%, மின் உற்பத்தி 8.09%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.10%, வாகன உற்பத்தி 3.01%, உலோக உற்பத்தி 6.12% ,பொதுத்துறை நிறுவனங்கள் 4.71% குறைந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 719 பங்குகளின் விலை அதிகரித்தது. 1877 பங்குகளின் விலை குறைந்தது. 56 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 48 பங்குகளின் விலை குறைந்தது. 2 பங்குகளின் விலை அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 41 பங்குகளின் விலை குறைந்தது. 8 பங்குகளின் விலை அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 17 பங்குகளின் விலை குறைந்தது. 2 பங்குகளின் விலை அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 10 பங்குகளின் விலை குறைந்தது. 2 பங்குகளின் விலை அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 44 பங்குகளின் விலை குறைந்தது. 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 1 பங்கு விலையில் மாற்றமில்லை.


Share this Story:

Follow Webdunia tamil