Newsworld Finance Market 0810 16 1081016059_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 228-நிஃப்டி 69 புள்ளி சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி சுமால் கேப் மிட்கேப்
, வியாழன், 16 அக்டோபர் 2008 (17:36 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. நண்பகல் 1 மணியளவில் படிப்படியாக முன்னேற ஆரம்பித்தது. ஆனால் இறுதியில் நேற்றைய அளவை எட்டவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 227.63 (2.11%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 10,581.49 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 63.35 (1.70%), சுமால் கேப் 107.09 (2.44%), பி.எஸ்.இ 500- 69.09 (1.71%) புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 69.10 (2.07%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3269.30 ஆக குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 5.15%, வங்கி 0.43 % அதிகரித்தது.

நுகர்வோர் பொருட்கள் 5.23%, தகவல் தொழில் நுட்பம் 3.99%, தொழில் நுட்பம் 6.03%, மின் உற்பத்தி 2.24%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.57%, வாகன உற்பத்தி 3.43%, உலோக உற்பத்தி 2.15% ,பொதுத்துறை நிறுவனங்கள் 1.10% குறைந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 833 பங்குகளின் விலை அதிகரித்தது. 1733 பங்குகளின் விலை குறைந்தது. 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 20 பங்குகளின் விலை அதிகரித்தது. 30 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 21 பங்குகளின் விலை அதிகரித்தது. 28 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 15 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 9 பங்குகளின் விலை அதிகரித்தது. 3 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 20 பங்குகளின் விலை அதிகரித்தது. 29 பங்குகளின் விலை குறைந்தது.


Share this Story:

Follow Webdunia tamil