Publish Date: Thu, 16 Oct 2008 (15:49 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக இன்றும் குறைந்தது. இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு ரூ.49 ஐ தாண்டியது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 49.04 பைசா என்ற அளவில் இருந்தது.
இது நேற்றை இறுதி நிலவரத்தைவிட 52 பைசா அதிகம்.
நேற்றை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 48.52/48.53.
பிறகு 1 டாலர் ரூ.48.76 முதல் ரூ.49.08 என்ற அளவில் விற்பனையானது.
கடந்த வாரம் 1 டாலரின் மதிப்பு ரூ.49.30 என்ற அளவிற்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 670 புள்ளிகள் குறைந்தது.
இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலரை வாங்குகின்றனர். அத்துடன் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வதால் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலரின் மதிப்பு ரூ.48.86 பைசா.
1 யூரோ மதிப்பு ரூ.65.51
100 யென் மதிப்பு ரூ.48.86
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.84.22.
Webdunia
Publish Date: Thu, 16 Oct 2008 (15:49 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)