Newsworld Finance Market 0810 15 1081015055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 674 -நிஃப்டி 180 புள்ளி சரிவு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி ஐடி
, புதன், 15 அக்டோபர் 2008 (17:09 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை அதிகரிக்க வில்லை. காலையில் இருந்து இறுதி வரை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

சென்செக்ஸ் 11 ஆயிரத்திற்கும் நிஃப்டி 3,500 க்கும் குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 674.28 (5.87%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 10,809.12 ஆக சரிந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 171.55 (4.41%), சுமால் கேப் 222.44 (4.82%), பி.எஸ்.இ 500- 219.93 (5.17%) புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 180.25 (5.12%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3338.40 ஆக சரிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 4.61%, நுகர்வோர் பொருட்கள் 8.88%, தகவல் தொழில் நுட்பம் 5.43%, வங்கி 3.25%, தொழில் நுட்பம் 6.03%, மின் உற்பத்தி 6.02%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.15%, வாகன உற்பத்தி 3.48%, உலோக உற்பத்தி 7.82% , பொதுத்துறை நிறுவனங்கள் 3.53% குறைந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 499 பங்குகளின் விலை அதிகரித்தது. 2117 பங்குகளின் விலை குறைந்தது. 39 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 47 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 45 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது. 43 பங்குகளின் விலை குறைந்தது.


Share this Story:

Follow Webdunia tamil