Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் சரிவு!

Advertiesment
பங்குச் சந்தைகளில் சரிவு!
, புதன், 15 அக்டோபர் 2008 (10:54 IST)
மும்பை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலை வர்த்தகம் துவங்கும் போது, நிஃப்டி 35, சென்செக்ஸ் 259.53 புள்ளிகள் குறைந்தன.

இதே போல் நேற்று அமெரிக்க பங்குச் சந்தையும் பாதிப்பிற்கு உள்ளானது. அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு கால தாமதம் ஆகும். இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட்களின் பங்குகள் விலை அதிக அளவு குறைந்தது. நேற்று அமெரிக்க ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாக தெரிவித்தனர்.

அதே நேரத்தில் பாங்க் ஆப் ஜப்பான் கவர்னர் மசாகி சிராகாமா கூறுகையில், உலக பொருளாதார நிலைமை இன்னும் நெருக்கடியில் உள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 76.62, நாஸ்டாக் 65.24, எஸ் அண்ட் பி 500-5.34 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-137.31 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 85.05 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3432.70 ஆக குறைந்தது.

காலை 10.32 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 309.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 11,174.30 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 91.56, சுமால் கேப் 98.89, பி.எஸ்.இ. 500- 101.58 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாடு பங்குச் சந்தைகளில் இன்று, ஹாங்காங்கினஹாங்செங் 490.89, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 46.89, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 33.26, ஜப்பானின் நிக்கி 143.59, சீனாவின் சாங்காய் காம்போசிட் 26.72 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.43மணியளவில் 410 பங்குகளின் விலை அதிகரித்தும், 1412 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 31 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 898.25 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 252.37 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

பங்குச் சந்தைகளில் நேற்று மதியத்திற்கு பிறகு இலாப கணக்கு பார்க்க துவங்கியதால், குறியிட்டு எண்கள் குறைந்தன. அதே நேரத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கியுள்ளன. இன்று முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யும். இதனால் குறியீட்டு எண்கள் சரிந்து வருகின்றன. மதியத்திற்கு பிறகு நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil