Newsworld Finance Market 0810 14 1081014052_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 174 -நிஃப்டி 28 புள்ளி உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி தேசிய பங்குச் சந்தை
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 174.31 (1.54%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 11,483.40 ஆக அதிகரித்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 61.45 (1.60%), சுமால் கேப் 101.74 (2.25%), பி.எஸ்.இ 500- 62.47 (1.49%) புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 27.95 (0.80%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3518.65 ஆக உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 1.84%, நுகர்வோர் பொருட்கள் 1.14%, தகவல் தொழில் நுட்பம் 5.36%, வங்கி 1.08%, தொழில் நுட்பம் 3.74%, மின் உற்பத்தி 0.56%, பெட்ரோலிய நிறுவனங்கள் 0.98%, வாகன உற்பத்தி 0.38% அதிகரித்தது.

அதே நேரத்தில் உலோக உற்பத்தி பிரிவு 1.94% , பொதுத்துறை நிறுவனங்கள் 0.97% குறைந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1656 பங்குகளின் விலை அதிகரித்தது. 972 பங்குகளின் விலை குறைந்தது. 55 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 30 பங்குகளின் விலை அதிகரித்தது. 20 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 33 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 18 பங்குகளின் விலை அதிகரித்தது. 1 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 8 பங்குகளின் விலை அதிகரித்தது. 4 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 33 பங்குகளின் விலை அதிகரித்தது. 16 பங்குகளின் விலை குறைந்தது.


Share this Story:

Follow Webdunia tamil